எமது நோக்கு

மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
 
அக்கரைப்பற்று பிரதேச செயலக கட்டிடத்தொகுதி
 
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் வரலாறு
 
அக்கரைப்பற்று பிரதேச வருமான வரி உத்தியோகத்தர் (DRO) பிரிவானது அட்டாளைச்சேனை,  திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக இருந்தது.1973 ஆம் ஆண்டு முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்துக்கான அட்டாளைச்சேனை வருமான வரி உத்தியோகத்தர் (DRO) பிரிவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. இதே போன்று 1978 ஆம் ஆண்டு திருக்கோவில் உதவி அரசாங்க பிரிவு (AGS)  தமிழ் பெரும்பான்மை சமூகத்துக்காக இதிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. எஞ்சிய பகுதி மேலும் பிரிக்க முடியாதவாறு முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகத்திற்கான அக்கரைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இருந்தது.
 
அக்கரைப்பற்று பிரதேச செயலகம் அம்பாரை மாவட்டத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பிரிவின் எல்லையானது வடக்கே அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கே ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும்,  தமண பிரதேச செயலகமும், மேற்கே சம்மாந்துறை பிரதேச செயலகமுமாகும். இப்பிரிவின் பரப்பு 102 சதுர கி.மீற்றராகும். மொத்த நிலப்பரப்பில் 80% மான பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுவதோடு எஞ்சிய 20% மான நிலங்கள் பயிர்ச்செய்கை காணியிலிருந்தும் தொலைதூரத்தில் பிரத்தியோகமாக அமைந்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவு 28 கிராம சேவகர் பிரிவுகளையும், மாநகர சபை நிர்வாக எல்லையையும், பிரதேச சபை நிர்வாக எல்லையையும் கொண்டுள்ளது.
 
கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் பற்றிய விபரம்
 

 பிரதேச செயலாளர்கள் 

 திரு. கந்தசாமி

 திரு. எஸ்எல்.சி. சிறிவர்த்தன

 திரு. பஸ்நாயக

 திரு. ஏ. கால்தீன்

 திரு. ஏ. அப்துல் மஜீத்

 திரு. ஐ.எல்.எம். சம்சுதீன்

 திரு. யூ. அஹமட் றாசி

 திரு. ஏ.எச்.எம். அன்சார்

 திரு. எம்.வை. சலீம்

 திரு. ஏ.எல்.எம். சலீம் (பதில்)

 திரு. ஏ.எம். அப்துல் லத்தீப்

 
 

News & Events

07
செப்2018
Division News

Division News

23-Jan-2020 அக்கரைப்பற்று பிரதேச செயலக நிதிப்பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட...

28
ஆக2017

Akkaraipattu- DCC Meeting -2020

  Akkaraipattu DCC meeting next 

குடியுரிமை சாசனம்

Scroll To Top